நாட்டில் இதுவரை 44 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனாத் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்று நோயியல் பிரிவுஇன்று வெளியிட்ட அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் இதுவரை ஒரு கோடியே 57 இலட்சத்து 72, 276 பேருக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸும், ஒரு கோடியே 35 இலட்சத்து 40 ஆயிரத்து 350 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






