மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவில் ஆயுள்வேத மசாஜ் நிலையத்தின் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டதுடன், மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவல மற்றும் பொலனறுவைப் பகுதியினைச் சேர்ந்த 21, 33, 38 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்ஹே வழிகாட்டலில், மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர் மற்றும் கல்குடா காவல்துறையினர் இணைந்தே இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை, வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சமூகநோய் தொடர்பான அறிக்கை பெறுவதற்காக தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக, கல்குடா காவல் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.








