யாழில் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றில் வாள் வெட்டு!

யாழ் மல்லாகம் பகுதியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் இன்றைய தினம் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் திடீரென நுழைந்த வன்முறைக் கும்பலொன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் படுகாயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துளு்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply