முல்லைத்தீவு மீனவர்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் சந்திப்பு

போராட்டங்களின் மூலமாகவே பிரச்சனைகளுக்கு தீர்வுகாணமுடியுமென பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு கள்ளபாடு பொது நோக்கு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது மீனவர்கள் தாம் அன்றாடம் எதிர்நோக்குகின்ற மீன்பிடி நடவடிக்கை தொடர்பான பிரச்சனைகளை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சந்திரலிங்கம் சுகிர்தன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

தென்னமரவடிப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுடைய வயல் நிலங்கள் தொடர்பாக சட்ட ரீதியாக தீர்வு காணப்பட்டு நீதிமன்ற கட்டளையை பெற்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிசார் நடவடிக்கை எடுக்காது இருக்கின்றனர்.

பௌத்த பிக்குகளை தம்மால் கைது செய்ய முடியாது என பொலிசார் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டதோடு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடைய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

போராட்டங்களின் மூலமாகவே பிரச்சனைகளுக்கு தீர்வுகாணமுடியுமெனவும், அனைத்தையும் சட்டரீதியாக தீர்த்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, கடல் வழியான மீனவர்களின் போராட்டத்தின் பின்னர் இந்திய தூதுவர் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பாகவும் இங்கு வெளிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply