தேங்காயினை சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு ஒரு வீட்டுக்கு தேங்காய் பாதி போதுமானதாகும் என தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அலஹப்பெரும தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 சதவீதம் வீணடிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, தேங்காய் பால் எடுக்கும் போது கையால் பிழிந்தால் 20-30 வீதம் அளவில் தேங்காய் பால் கிடைக்கும்.
எனினும்nஅரைப்பான், திரிகைக்கல் ஊடாக அரைத்து எடுக்கும் போது 50 வீதத்திற்கும் அதிமான அளவு தேங்காய் பால் பெறமுடியுமென மேலும் தெரிவித்தார்.






