கடந்த நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பயணித்த போதுஇ பல வாகனங்கள் அவர்களைப் பின்தொடர்ந்து வீதிகளும் மூடப்பட்டதை நாம் பார்த்தோம். இவற்றை நிறுத்தினேன்.
ஜனாதிபதியின் ‘நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்தின் கீழ் 100இ000 கிலோமீற்றர் காபட் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 1இ500 வீதிகளை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும் தெரிவிக்கையில்இ
நான் அமெரிக்கா சென்றபோது எனது வாகனத்தை பின்தொடர்ந்து 15 வாகனங்கள் வந்தன. இங்கே நமக்கு அப்படி தேவையில்லை.
என்னிடம் 2 பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே உள்ளன.
நான் ஐ.நா பொதுச் சபையில் கலந்து கொண்டபோதுஇ சாதாரண ஹோட்டலில் தங்கியிருந்தேன்.
என்னுடன் வந்த என் மனைவிக்கு விமான ரிக்கெட்டுக்கு பணம் கொடுத்தேன்.
என்னுடன் 7 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.
எனக்கு ஒரு அரண்மனை இருக்கிறது. தேவையில்லாத வீண் விரயங்களைத் தவிர்த்துஇ நான் தங்கியிருந்த அதே வீட்டில் இப்போதும் தங்கியிருக்கிறேன்.
அதுதான் எனக்கும் நல்லாட்சிக்குமான வித்தியாசம்- என்றார்.






