நொச்சியாகம – செட்டிக்குளம் வீதியின் ஒயாமடுவ வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
புத்தளத்தில் இருந்து இன்று அதிகாலை ஒயாமடுவ வீதி ஊடாக மன்னாரை நோக்கிச் சென்ற இ.போ.சபையின் மன்னார் சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், எதிர்த்திசையில் இருந்து பயணித்த வேன் ஒன்றும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் வேன் சாரதி மற்றும் வேனில் சாரதிக்கு அருகில் இருந்து பயணம் செய்த ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
தொடரும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை ஒயாமடுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திமுது குணசேகர உறுதி செய்துள்ளார்.
மேலும், வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.







