சிறைச்சாலை விடுதலையின் பின் திருமலைக்கு விஜயம் செய்த ரிசாட்! மக்கள் அமோக வரவேற்பு

ஆறு மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான ரிசாட் பதியுதீன் , திருகோணமலை மாவட்டத்திற்கு முதன் முறையாக விஜயம் செய்துள்ளார்.

குறித்த விஜயமானது நேற்று(06) இடம் பெற்றதுடன் மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டார்.

திருகோணமலை மக்கள் ரிசாட் பதியுதீனை உற்சாக வரவேற்பளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னால் பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல் மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்ற இம் மக்கள் சந்திப்பில் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, புல்மோட்டை,புடவைக்கட்டு, குச்சவெளி, இறக்கக்கண்டி, மூதூர்,தோப்பூர்,கிண்ணியா பகுதி மக்கள் ரிசாட்டை வரவேற்பளித்ததுடன் பள்ளிவாயல்களில் விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply