திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, மாணவன் ஒருவர் உயிரிழந்த தொல்புரத்தில் இடம்பெறுள்ளது.
நேற்றிரவு நித்திரைக்கு சென்ற மாணவன், இன்று காலை உடல்நிலையில் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
எனினும், வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்/வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் உயர்தரப்பிரிவில் கல்விபயிலும் மகிந்தன் என்ற பதினேழு வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






