ரணிலிடம் நாட்டை ஒப்படைத்தால் எரிவாயு விலையை 48 மணி நேரத்தில் குறைக்க முடியும் – வஜிர அபேவர்தன

மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாட்டை ஒப்படைத்தால் 48 மணித்தியாலங்களுக்குள் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அக்கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தகைய செயலைச் செய்ய, ஒருவருக்கு அறிவு, அனுபவம் மற்றும் கட்டுப்பாட்டு உணர்வு இருக்க வேண்டும்.

2015ஆம் ஆண்டு நாட்டைக் கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்க, இத்தகைய நெருக்கடியான பொருளாதார நிலையிலேயே நாட்டை கைப்பற்றினார்.

இதன்போது பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்ததார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply