நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுளளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,841 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 03 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 01 ஆணும் 02 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






