நத்தார் தினத்தில் நத்தார் தாத்தா வருவதைப் போன்றதல்ல பாதீடு! தயாசிறி ஜயசேகர

நத்தார் தினத்தில் நத்தார்; தாத்தா வருவதைப் போன்று பாதீடு இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. பாதீடு என்பது, நாட்டின் எதிர்காலம் மற்றும் வரவிருக்கும் ஆண்டுக்கான பொருளாதார வேலைத்திட்டத்தின் கண்ணாடியாகும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் தொகுதிக்கான கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. ஏனெனில், நாட்டின் பொருளாதார நிலைமை அவ்வாறு காணப்படுகின்றது. எதிர்வரும் பாதீட்டில் மக்களுக்கு பாரிய அளவில் நிரவாணம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

பாதீட்டின் மூலம் நிவாரணம் வழங்கப்படும் என கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. எனவே, இந்த பாதீடு தொடர்பில் அதிகளவான எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்துகின்றோம்.

பாதீடு என்பது வருடாந்த நிலைமையை எதிர்கொள்வதற்கான திட்டங்களை முன்வைப்பதே ஆகும். ஆனால், துரதிஸ்டவசமாக இலங்கை மக்கள், பாதீட்டில் சம்பளம் அதிகரிக்கும், நிவாரணம் வழங்கப்படும் என நினைத்து அதற்கு பழக்கப்பட்டு விட்டனர்.

நத்தார் தினத்தில் நத்தார் தாத்தா வருவதைப் போன்று பாதீடு இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. அந்தத் தவறான புரிதலின் காரணமாகவே, இன்று நாட்டில் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பாதீடு என்பது நாட்டின் எதிர்காலம் மற்றும் வரவிருக்கும் ஆண்டுக்கான பொருளாதார வேலைத்திட்டத்தின் கண்ணாடியாகும். அங்கு சில சலுகைகள் மற்றும் வரி அதிகரிப்புகள் செய்யப்படலாம். பாதீட்டில் எமக்கு எதுவும் கிடைக்கவில்லை என்ற மனநிலையில் இருப்பது நல்லதல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் அசமந்த போக்கால் பறிபோன உயிர் – உறவுகள் விசனம் (வீடியோ இணைப்பு)

Leave a Reply