மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு!

பதுளை, லுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலகொல்ல பிரதேசத்தில் சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

லுனுகல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

ரவுட்டருக்கு மின்னிணைப்பை ஏற்படுத்த முயன்றபோதே, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக லுனுகல பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், படுகாயமடைந்த மாணவனை லுனுகல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், உயிரிழந்தார்.

லுனுகலை வைத்தியசாiயின் பிரேத பரிசோதனைக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply