உயர்தர, சாதாரண தர, மாணவர்களுக்கு இன்று பாடசாலை ஆரம்பம்

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய உயர்தரம் மற்றும் சாதாரண தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் முதன்முறையாக கொவிட் தொற்று இனங்காணப்பட்டதையடுத்து , மாணவர்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மூடப்பட்டன.

அதன் பின்னர் இந்த இரு ஆண்டுகளாகவும் பல்வேறு சந்தர்ப்பங்கள் பாடசாலைகள் திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டன.

எவ்வாறிருப்பினும் தற்போது கொவிட் பரவல் நிலைமையானது ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் நிலையில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் முதற்கட்டமாகவும் , அதனையடுத்து 1 – 5 வரையான வகுப்பு மாணவர்களுக்கும் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது இன்று முதல் உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

இதேபோன்று ஏனைய வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் கற்பித்தலை ஆரம்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply