தமிழகம் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் சடலம் யாழ். காரைநகர் கடற்கரையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
தமிழகம் நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை மீனவர் பழனி கடலில் மீன்பிடித்தபோது, தவறி விழுந்துள்ள நிலையில், ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று சடலம் கரையொதுங்கியுள்ளது.
காரைநகர் கோவளம் கரையில் இன்று மதியம் குறித்த சடலம் ஒதுங்கியுள்ளது.
தற்போது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.







