தனியார் கைகளுக்கு செல்லும் மத்தள சர்வதேச விமான நிலையம்!

மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகளும் விற்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்தள விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும். அத்துடன் நாட்டில் விமானப் போக்குவரத்து செயல்முறையை மறுசீரமைக்கும் போது அன்னியச் செலாவணியை ஈட்டும் வகையில் விமான நிலையம் மாற்றப்பட வேண்டும், அத்துடன் பராமரிப்பு தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டி சில்வா குறிப்பிட்டார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பாதுகாப்பு வலையமைப்பாக இரண்டாவது விமான நிலையமாக மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply