இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும்! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கை மின்சார சபை, மறுசீரமைக்கப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த வேலைத்திட்டத்துக்கு தமது ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கணக்கியல், முகாமைத்துவம், இயக்கம் மற்றும் பரிமாற்றம் முதலான பணிகளை மின்சார சபையில் உள்ள பொறியியலாளர்களே செய்கின்றனர்.

தொழில்நுட்பவியலாளர்கள், தொழில்நுட்ப பணியையே செய்ய வேண்டும்.

எனவே, இதற்கு சிறந்த முகாமைத்துவ குழு அவசியமாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply