ரோயல் பார்க் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் விசாரணை !

ரோயல் பார்க் கொலை வழக்கின் பிரதான குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இவான் ஜோன்சன் என்ற 19 வயது ஸ்வீடன் நாட்டுப் பெண் 2005ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதி ராஜகிரிய ரோயல் பார்க் வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அவரது காதலன் ஜூட் ஷிரமந்த ஜயமஹா மீது குற்றம் சாட்டப்பட்டதுடன், நீண்ட விசாரணையின் பின்னர் 2012ஆம் ஆண்டு சந்தேகநபருக்கு 12 வருட சிறைத்தண்டனையும் 3 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் 2016 ஆம் ஆண்டு, இந்த குற்றவாளிக்கு  ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தார்.

பின்னர், அதன் சட்ட அமைப்பு பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்ற நிலையில் இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

Leave a Reply