இலங்கை திரும்பும் கோட்டாவை வரவேற்க சமூக வலைத்தளங்களில் தீவிர பிரச்சாரம்!

வெளிநாட்டில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரசாரமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இதன்படி முகநூல் ஊடாக # BringBackGota மற்றும் #BringHomeGota என்ற (கோட்டா மறுபடியும் வர வேண்டும் ” ) ஹேஸ் டேக் மூலம் இந்த பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . இதில் அவரின் ஆதர வாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .

இதேவேளை அவர் நாடு திரும்பும் தினத்தில் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்பளிப்பதற்கும் அவரின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர் . இதற்காக பெருந்திரளானவர்களை விமான நிலையத்திற்கு வரவழைக்கும் வகையிலும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் .

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக் கான முன்னாள் தூதுவர் உதயங்க வீர துங்க அண்மையில் தெரிவித்திருந் தார் . இதன்படி 24 ஆம் திகதி அவர் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் , அன்றைய தினத்தில் பெருந்திரளானவர்கள் விமான நிலையம் சென்று அவரை வரவேற்பதற்கான ஆயத்தங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply