வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான உழவு இயந்திரம்: மூவர் பலி – பலர் காயம்!

திருகோணமலை – மூதூர் – பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply