
எதிர்க்கட்சி தலைவரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அவசரமாக கட்சி கூட்டமொன்றை கூட்டியுள்ளார்.
கூட்டங்கள் கூடுதல் மற்றும் போராட்டங்கள் நடாத்துதல் என்பனவற்றை வரையறுத்து அரசாங்கம் புதிய சுகாதார வழிகாட்டல்கள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித்திடம் கலந்துரையாடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்தாலோசனை நடாத்த உள்ளார்.
எதிர்வரும் 16ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டமொன்றை கட்சி ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






