எரிபொருள் வாங்கி தருவதாக பணம் மோசடி; மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடுவெல – வெலிவிட்ட பகுதியில் டீசல் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த நபரை மின் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

கொலன்னாவ பிரதேசத்தினை சேர்ந்த சந்தேகநபர் நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு டீசல் வாங்கி தருவதாக கூறி பணத்தினை பெற்று பொது மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்துள்ளாார்.

இந்நிலையில், சந்தேகமடைந்த பொதுமக்கள் குறித்த நபரை கையும் களவுமாக பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுவெல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

IMF நிபந்தனை – அரச உத்தியோகத்தர்களின் வேதனம் குறைக்கப்படுமா? https://samugammedia.com/imf-conditionality-will-the-suffering-of-government-officials-be-eased/

Leave a Reply