முட்டை விலையை அதிகரித்து விற்றால் ரூ.50 லட்சம் அபராதம் – ஆறு மாதம் சிறை!

அரசாங்கம் நிர்ணயித்த விலை வரம்புகளுக்குட்பட்டு முட்டைகளை விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

முட்டைகளை அதிக விலைக்கு விற்றால் குறைந்த பட்ச அபராதம் 1 இலட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதம் 5 இலட்சம் ரூபாவும் என மேற்படி அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்தார்.

ஒரு தனியார் நிறுவனத்துக்கு குறைந்தபட்ச அபராதம் 5 லட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதமாக 50 லட்சம் ரூபாவும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்து அரசாங்கம் தற்போது வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply