நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் 19 மூன்றாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பமாகவுள்ளது என இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தடுப்பூசி ஏற்றி 03 மாதங்கள் முழுமை பெற்றவர்களுக்கே இவ்வாறு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அதன்படி, அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

முதலாவது மற்றும் இரண்டாவதாக எவ்வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply