சீர்வளர்சீர் ஆறுமுக நாவலர் பெருமானின் திருவுருவச்சிலை திறப்பு விழா, நாளை காலை இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் -நாவலர் கலாச்சார மண்டபத்தில் நாளை புதன்கிழமை காலை 10 மணியளவில்
நந்திக் கொடி ஏற்றுதலோடு சீர்வளர்சீர் ஆறுமுக நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறக்கப்படவுள்ளது.
இவ்விழாவிற்கு யாழ். மாநகரசபை ஆணியாளரான இ.த.ஜெயசீலன் தலைமை தாங்கவுள்ளதோடு, யாழ். மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன்
பிரதம விருந்தினராகவும் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், அகில இலங்கை சைவ மகா சபை பொதுச் செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா. சுதர்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இறை வணக்கத்துடன் ஆரம்பமாகும் இவ்விழாவில், வரவேற்புரையை சைவ மகா சபையின் உபதலைவர் த. சிவரூபனும், தலைமையுரையை சி.சர்வராசாவும் , நன்றியுரையை மருத்துவர் தி. சுதர்மன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.
அத்துடன், சிலை வடிவமைப்பு சிற்பி கௌரவிப்புக்கான பிரதம விருந்தினர் உரையை, சிவசிற்ப வாரிதி உ.கஜேந்திரன் ஆற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







