நாட்டுக்கு பங்களிப்பு செய்யவே கடவுச்சீட்டை பெற வரிசையில் நிற்கின்றனர்: பொதுஜன பெரமுன

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இம்முறை கொண்டு வந்துள்ள வரவு செலவுத்திட்டம் சிறந்த வரவு செலவுத்திட்டம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் (Sagara Kariyavasam) தெரிவித்துள்ளார்.

இம்முறை முழுமையான அபிவிருத்தி வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு,தேசம் என்ற வகையில், ஏதோ ஒரு நல்லவழிப் பிறக்க போகும் அடையாளங்களை காணமுடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சாகர காரியவசம் இதனை கூறியுள்ளார்.

கொரோனா தொற்று நோய் காரணமாக வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய தொழிலாளர்கள் மீண்டும் கடவுச்சீட்டை பெற வரிசையில் நின்று, வெளிநாடு சென்று, தாய் நாட்டுக்கு தமது பங்களிப்பை வழங்க முயற்சித்து வருகின்றனர் எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

Leave a Reply