எதிர்க்கட்சியின் பேரணிக்கு 5 ஆம் இலக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி

<!–

எதிர்க்கட்சியின் பேரணிக்கு 5 ஆம் இலக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி – Athavan News

ஐக்கிய மக்கள் சக்தி இன்று (16) ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு 5 ஆம் இலக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்தோடு, சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு மேலதிக நீதிவான் பண்டார நெலும்தெனி உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்த தடைவிதித்து இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு பொரளை பொலிஸாரால் 2ஆம் இலக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply