நுண்கலைமாணி இரண்டாம் வருட நடன கற்கைநெறி மாணவர்களுக்கான பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் யாழ். இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் ஊடாக கோரப்பட்டுள்ளது.
இரண்டாம் வருட நடன கற்கைநெறி மாணவர்கள் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து 20.11.2021 ஆம் திகதிக்கு முன்னர் இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விண்ணப்ப படிவுத் திகதியின் பின் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும் என்பதனை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவசான்றிதழ் சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ளப்பட்டோரும் பரீட்சைப் பெறுபேற்றினை தரமுயர்த்துவதற்கு ஒவ்வொரு பாட அலகிற்கு ரூபா 250.00 வீதம் யாழ் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையில்
(162 100/MAKISSU) செலுத்திப் பற்றுச் சீட்டை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது;






