
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து தரங்களையும் அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்திருந்தார்.
அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் தரம் 6-7-8-9 இன் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் இன்று(16) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் பேரில் நான்கு கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
முதற்கட்டமாக 200 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப தரம், இரண்டாம் கட்டத்தின் கீழ் அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப தரம், மூன்றாம் கட்டத்தின் கீழ் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர தரங்களும் ஆரம்பிக்கப்பட்டன.
நான்காம் கட்டத்தின் கீழ் உள்ள சகல பாடசாலைகளிலும் அனைத்து வகுப்புகளும் எதிர்வரும் வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கும்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





