
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமையால், வடக்கு மாகாணம் உட்பட நாட்டிலுள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் நோக்கில் மக்கள் கவிந்தனா்.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று எரிசக்தி அமைச்சா் உதய கம்மன்பில தெரிவித்துள்ள போதும், இன்று நாட்டில் உள்ள எாிபொருள் நிரப்பு நிலையங்களில் எாிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நேற்று மாலை தொடக்கம் நீண்ட வரிசையில் கூடியிருந்தனா்.
பொதுமக்கள் வழக்கத்துக்கு மாறாக அதிமாக எரிபொருள் கொள்வனவு மேற்கொண்டால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.





