மனோ கணேசனுக்கு கொரோனா உறுதி

<!–

மனோ கணேசனுக்கு கொரோனா உறுதி – Athavan News

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அவர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்தில் நேற்று (புதன்கிழமை) பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் ‘பொசிடிவ்’ பெறுபேற்றை பெற்றுள்ளேன். தற்சமயம் தனிமைப்படுத்தலில் சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளேன். விரைவில் நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.


Leave a Reply