காலை நித்திரை விட்டு எழும்போது அரசாங்கம் கவிழ்ந்ததாக விசேட செய்தி வரும்! ராஜித

காலை நித்திரை விட்டு எழும்போது அரசாங்கம் கவிழ்ந்ததாக விசேட செய்தி வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், அரசாங்கத்தில் உள்ள பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி புதிய அரசாங்கம் உருவாக்கப்படும்.

சிலர் உடனடியாக எம்முடன் இணைய விரும்பிய போதும், அதற்கு இன்னும் சிறிது காலம் கடக்க வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எந்தவொரு சக்தியுடனும் இணைந்து இந்த அரசாங்கத்தை விரைவில் கவிழ்ப்பதுடன், காலை விடிந்து எழும்பும் போது இரவு அரசாங்கம் கவிழ்ந்ததாக செய்தி வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயர்கள் தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்! மறவன்புலவு சச்சிதானந்தன்

Leave a Reply