கொரோனாத் தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள்

நூஉல, அம்பன சிகிச்சை நிலையத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் புழுக்கள் உள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாஉல – அம்பன பிரதேசத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக தனிமையாக அறை தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.

சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த தொகுதியினுள் மாத்தளை மாவட்ட கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பபடுகின்றது.

அந்த நோயாளிகளுக்கு வைத்தியசாலையின் கண்கானிப்பின் கீழ் உணவு வழங்கப்படுவதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர். அந்த உணவுகளில் புழுக்கள் உள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாத்தளை மாவட்ட சுகாதார பணிப்பாளர் சமிந்த வீரகோனவிடம் வினவிய போது,

நோயாளிகள் தன்னிடம் இந்த விடயத்தை குறிப்பிட்டதாகவும், அதற்கு தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலை நித்திரை விட்டு எழும்போது அரசாங்கம் கவிழ்ந்ததாக விசேட செய்தி வரும்! ராஜித

Leave a Reply