
நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டது.
வாஷிங்டன் நவம்பர் 18 தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் மற்றும் உலக தமிழர் பேரவையின் (புடழடியட வுயஅடை குழசரஅ) பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் வஸிங்டனில் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற மையை நேற்று நள்ளிரவு அமெரிக்கத் தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
திங்களன்று பத்து தரப்புகளுடனும் செவ்வாயன்று பத்து தரப்புகளுடனும் நேற்று ஐந்து தரப்புகளுடனும் இக்குழு சந்திப்புகள் நடத்தி கலந்தாய்வுகளை மேற்கொண்டது.
இந்த சந்திப்புகள் கலந்தாய்வுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தியோக பூர்வமாக அறிவிப்புகளை வெளியிடும் என தமிழ் தரப்பு பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது. அதனால் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் இச் சந்திப்பு தொடர்பில் தங்கள் பக்கத்தில் இருந்து அறிவிப்புகள் மற்றும் தகவல் வெளியீடுகளை தவிர்த்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக நடந்த சந்திப்புகளில் தமிழர் தரப்பில் மொத்தம் 9 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவில் ஜனாதிபதி சட்டத்துறையின் எம்.ஏ.சுமந்திரன், எம்.பி.கனகேஸ்வரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.
உலகத் தமிழர் பேரவையின் சார்பில் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒவ்வொரு பிரதிநிதியும் அமெரிக்காவிலிருந்து மூவருமாக மொத்தம் ஆறு பேர் பங்கு பெறுகின்றனர்.
அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பல்வேறு திணைக்களங்களின் இரண்டாம் நிலை அதிகாரிகள் தமது அரசின் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பு நிலைப்பாடுகள் சம்பந்தமான தீர்மானங்களை எடுப்பதற்காக தமிழர் தரப்புடன் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் த ரஞ்சித் சிங் சந்து நேற்று முன்தினம் இரவு கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரனை அழைத்து இரவு விருந்து உடன் சந்திப்பு நடத்தினார்.
அமெரிக்க தரப்புடன் தமிழ் பிரதிநிதிகள் தற்போது நடத்தும் கலந்தாய்வுகள் குறித்து சுமந்திரனிடம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் விவரமாகக் கேட்டறிந்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இச் சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் அமெரிக்க நேரப்படி நேற்று புதன்கிழமை பாடல் (இலங்கை நேரப்படி நேற்றிரவு) பல்வேறு பேச்சுக்களை முடித்துக்கொண்டு சுமந்திரன் நீயோர் புறப்பட்டார்.
அவருடன் வாஷிங்டன் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரனும், திருமதி நிர்மலா சந்திரகாசன் வாஷிங்டனிலேயே தங்கியுள்ளனர்.
நீயோர் கிப்ட் சுமந்திரன் உடன் உலகத் தமிழர் பேரவையின் ஓரிரு பிரதிநிதிகளும் சேர்ந்து செல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
நீயோர்க்கில் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி, இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் ஐ.நாவின் உயர்மட்ட அலுவலர்களோடும், சுமந்திரன் குழுவினர் சந்திப்பில் ஈடுபடுவர் என தெரிவிக்கின்றது.
நீயோர் பேச்சுக்கலை முடித்து சுமந்திரன் தலைமையிலான குழுவுடன் பேச்சுகள் கலந்தாய்வுகள் நடைபெறுகின்ற மையை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இரண்டு பிரிவுகள் முவிட் செய்திகள் மூலம் படங்களுடன் வெளியிட்டு உறுதிப்படுத்தியது.
அவற்றில் ஒன்று State Department GCJ. இது கொடுமைகளுக்கு எதிரான பொறுப்புக்கூறலை மேம்படுத்துவது, பூகோளக் குற்றங்களிலிருந்து பாதிக்கப்படுவோரை பாதுகாப்பது, நிலை மாறுகால நீதிப் பொறிமுறையை மேம்படுத்துவது ஆகியவை தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரிவாகும்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவு என்றும் அதனை அழைப்பர்.
அது, “நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு இலங்கையின் சிறுபான்மை இனக் குழுக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கவலைகளை செவிமடுப்பது முக்கியமாகும். அந்தவகையில் பூரணத்துவமான நிலைமாறு கால நீதி கூறிய நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதியாக அரசியல் பிரதிநித்துவம் மற்றும் நல்லிணக்கம் குறித்து இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகிய தரப்புகள் உடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களில் ஈடுபட்டோம்.” – என்று தெரிவித்துள்ளது.
இதேசமயம்-
அமெரிக்க ராஜாங்க அமைச்சின் ஜனநாயகம் மனித உரிமைகள் தொழிலாளர் பணியகம்(Bureau of Democracy, Human Rights, Labor) மேற்படி தமிழ் குழுவினருடன் ஆன பேச்சுகள் குறித்து பிறிதொரு டுவிட் செய்தியை வெளியிட்டது.
“இலங்கையில் சிறுபான்மை குழுவினரின் பாதுகாப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவது அமெரிக்காவின் முன்னுரிமை விடயமாகும்.
இலங்கையில் தற்போது நிலவும் மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் புலம்பெயர் சமூகங்கள் உடனான ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளை சந்தித்தோம்.” – என்று அந்த அமைப்பு தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
இதே போன்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் சுமார் இருபதுக்கு மேற்பட்ட பணியாளர்கள், பிரிவுகள் தரப்புடன் மேற்படி ஒன்பது பேர் கொண்ட தமிழர் தரப்பு பிரதிநிதிகள் குழு நேற்று வரை பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது.






