வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இன்று குருதி தானம் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலையின் குருதி வங்கியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக குறித்த விளையாட்டு கழகத்தினால் குருதி தானம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வருடாவருடம் இச்செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் கழகத்தை சேர்ந்த அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு குருதிதானம் வழங்கியிருந்தனர்.








