திருகோணமலை மொறவௌ பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை!

திருகோணமலை மொறவௌ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முதலாம் வாய்க்கால் விவசாய கிராமத்துக்குள் நேற்று இரவு மூன்று காட்டுயானைகள் உள்நுழைந்து, அங்கு விவசாயிகளின் வாழ்வாதாரங்களுக்கு பலத்த சேதங்களை விளைவித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதில், சில வீடுகளை உடைத்து விட்டு பொருட்களையும், தளபாடங்களை தும்சம் செய்து விட்டு, வேளாண்மை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த விதை நெல் மூடைகளையும் தின்று நாசப்படுத்தி விட்டது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

காட்டு யானைகளின் தொல்லை தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், யானைகளால் ஏற்படுகின்ற பாதிப்புகள் காரணமாக எங்களது வாழ்வாதாரங்களை தொடர்ந்து இழந்து வருவதாகவும், இந்த நிலை மேலும் தொடருமானால் எங்களுடைய நிலை மிகவும் மோசமடையும் என்றும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்நிலை தொடர்ந்து இடம்பெறாமல் இருப்பதற்கு, காட்டு யானைகளால் இவர்களுடைய சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஏற்படுகின்ற அழிவுகளுக்கு உரிய நட்ட ஈடுகளை வழங்குவதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply