QR முறைமையால் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் கடும் நெருக்கடியில்!

எரிபொருள் பெறுவதற்காக QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எரிபொருள் விற்பனை 60% குறைந்துள்ளது.

இதனால் டேங்கர் நடத்துனர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தனியார் பவுசர்கள் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா இது குறித்து தெரிவிக்கையில்,

முடிவில்லாத எரிபொருள் வரிசையை கட்டுப்படுத்தவும், அந்நிய செலாவணியை சேமிக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு உடன்பட்டோம்.

QR குறியீட்டை அறிமுகப்படுத்திய பிறகு, எரிபொருள் பயன்பாடு குறைந்துள்ளது, மேலும் எரிபொருளை ஏற்றிச் செல்லும் பவுசர் உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் (CB) அறிக்கையின்படி, எரிபொருள் இறக்குமதிக்காக மாதாந்தம் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது.

தற்போது அது 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. பொருளாதாரத்தை உயர்த்த அரசாங்கம் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.

ஆனால் தனியார் பவுசர்கள் உரிமையாளர்களும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார்.

பிற செய்திகள்

Leave a Reply