நிலாவெளியில் தையல் பயிற்சி நெறி மாணவிகளின் கண்காட்சி!

கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குச்சவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட  நிலாவெளி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில்  ஏற்பாடு செய்த தையல் பயிற்சி நெறி மாணவர்களின் கண்காட்சி  (23) இடம் பெற்றது.

நிலாவெளி பிரதேச சபை கட்டிடத்தில்  மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் இடம் பெற்ற இக் கண்காட்சி நிகழ்வில் தையல் பயிற்சி மாணவிகளினால் தயாரிக்கப்பட்ட கைப்பணி பொருட்கள்,ஆடை உற்பத்தி,பாரம்பரிய கைப்பணி பொருட்கள் என பல பொருட்கள் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டன. 

இதில் கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் என்.தனஞ்செயன் ,குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பத்மராஜா, பதில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ப.செந்தூரன் ,தையல் பயிற்சி நிலைய போதனாசிரியர் நிஹாரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply