
திருகோணமலை – கந்தளாய் குளத்தின் சுத்திகரிப்பு பணிகள் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை பிராந்திய பொதுமுகாமையாளர் எஸ்.ஜயந்தன் இதனைத் தெரிவித்தார்.
கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, ஆண்டாங்குளம், நிலாவளி மற்றும் திருகோணமலை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் நீர் விநியோகம் முற்றாக தடைப்படும்.
அத்துடன், இரவு நேரங்களில் குறித்த பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் இடம்பெறும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.
பிற செய்திகள்




