கல்முனை வடக்கு பிரதேச இளைஞன் தேசிய ரீதியில் முதலிடம்!

கல்முனை வடக்கு பிரதேச இளைஞன் தேசிய ரீதியில் முதலிடம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலாச்சார போட்டியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சார்பில் பேச்சுப் போட்டியில் பங்குபற்றிய நாகராஜா சனாதனன்( தமிழகரன் சனா ) மாவட்ட மட்ட போட்டியிலும் மாகாண மட்ட போட்டியிலும் 1 இடத்தினைப் பெற்று இறுதியாக தேசிய மட்டத்தில் 9 மாகாணங்கள் உடன் போட்டி போட்டு அப் போட்டியிலும் முதலாம் இடத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு சாதனையில் பெற்றுத்தந்துள்ளார். மேலும் இவரின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும் என்று கல்முனை இளைஞர்கள் சார்பில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சரன்தாஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Leave a Reply