டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 24 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 40 சதமாகவும்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 71 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 437 ரூபா 01 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 419 ரூபா 79 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 77 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 353 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply