மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு! நெடுங்கேணியில் கொதித்தெழுந்த முதியவர்

மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு கிடைக்கும் என என நெடுங்கேணியில் முதியவர் ஒருவர் கொதித்தெழுந்துள்ளார்.

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் நெடுங்கேணி கந்தசாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் இந்த மண்ணிலே ஏன் பிறந்தோம் என்று தான் சிந்திக்க தோன்றுகின்றது. பட்டதாரிகள் மாணவர்கள் உரிமைக்காக போராடிய போது பயங்கரவாத சட்டம் என்று கூறி கைது செய்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு ஒரு ஆசனம் கூட இல்லை. அவர் எங்களுக்கு ஆட்சி புரிவதென்றால் எவ்வாறு. இது பாரத பரம்பரை, இது வன்னிமண் என மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply