IMF பிரதிநிதிகள்-ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு

கொழும்பு,ஓக 24

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட சந்திப்பை, எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது

அத்துடன், தொழிநுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தையை, எதிர்வரும் நாட்களில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
இன்றைய சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல் குழுப் பிரதானி Peter Breuer உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.

Leave a Reply