இலங்கை மின்சாரசபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினமும் (25) 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில், பகல் வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.
அதேநேரம், கொழும்பு முன்னுரிமை பகுதிகளில் காலை 6.00 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தபடவுள்ளது.
மேலும், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்