வருவதா? விடுவதா? – முடிவு கோட்டாவிடம் என்கிறார் தினேஷ்

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்று எனக்குத் தெரியாது. நாடு திரும்புவதா? இல்லையா? என்பது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும்.” – இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கோட்டாபய ராஜபக்ச தனது சுயவிருப்பின் பிரகாரம் நாட்டை விட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்திருந்தார். தற்போது அவர் முன்னாள் ஜனாதிபதி.

முன்னாள் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்கள் அவருக்கு உண்டு. இந்நிலையில், அவர் எப்போது நாடு திரும்புவார் என்று எனக்குத் தெரியாது.

நாடு திரும்புவதா? இல்லையா? என்பது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும்.

அவர் நாட்டுக்கு வந்தால் அரசியலில் ஈடுபடுவரா? இல்லையா? என்பது தொடர்பில் அவர்தான் தீர்மானம் எடுக்க வேண்டும்” – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply