ஆடை ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக 500 மில்லியன் டொலர்களை கடந்துள்ளது!

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 536.65 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், ஜூலை மாதத்தில் அதே வருமானம் 522.13 மில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களைக் கருத்தில் கொண்டால், நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானம் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.

2021ஆம் ஆண்டில் ஆடை ஏற்றுமதி மூலம் இலங்கை 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.

Leave a Reply