ஜனாதிபதி மொனராகலை, கதிர்காமத்திற்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் மொனராகலை மற்றும் கதிர்காமத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி எதிர்வரும் 27ஆம் திகதி மொனராகலைக்கு செல்லவுள்ளார்.

இதன்போது மொனராகலை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர், எதிர்வரும் 28ஆம் திகதி கதிர்காமம் கிரிவெஹர மற்றும் ஆலயம், வடசித்தி கந்த விகாரை, திஸ்ஸமஹாராம விகாரை ஆகிய இடங்களுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *