
நுகர்வோர் மற்றும் அவர்களின் உரிமைகளுக்கான அரசியல் கட்சியொன்று விரைவில் உருவாக்கப்படும் என நுகர்வோர் மற்றும் சிவில் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் உரிமைகளுக்காகப் போராடும் வகையில் தேசிய நுகர்வோர் முன்னணியின் கீழ் அடுத்த தேர்தலில் இந்த கட்சி போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியைச் சந்திக்கும் நுகர்வோரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த கட்சி அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவை விநியோகிக்கும் இரண்டு நிறுவனங்கள் நெருக்கடியைப் பயன்படுத்தி நியாயமற்ற விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்கின்றன.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவே செலவாகிறது.
எனினும் இலங்கை சந்தையில் அது 350 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பிற செய்திகள்




