போதைப்பொருள் தடுப்பு ,பெண் வன்முறை தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு!

திருகோணமலை தம்பலகாமம் பிரதேசதாதுக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் வன்முறை தொடர்பான விழிப்புணர்வுக் பயிற்சி பட்டறை புதுக்குடியிருப்பு தெலுங்கு நகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இன்று (25) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்வை இளைஞர் அகம் ஏற்பாடு செய்திருந்தது.
போதைப் பொருள் பாவனை,பெண்களுக்கு ஏற்படும் வீட்டு வன்முறைகள் என பல விளக்கங்கள் இதன் போது இளைஞர் யுவதிகளுக்காக விழிப்புணர்வூட்டப்பட்டது.

வளவாளராக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாமினி மற்றும் அகம் நிறுவன உத்தியோகத்தர், சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர் ஹம்சபாலன் உள்ளிட்டோரால் நிகழ்வு இடம் பெற்றது.

இதில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அனஸ்,சமுதாய சீர் திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹம்சன் இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஜாபீர், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ,தம்பலகாமம் பொலிஸ் அதிகாரி,அகம் நிறுவன உத்தியோகத்தர்கள் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply