புலம்பெயர் மக்கள் இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்

புலம்பெயர்ந்த உறவுகள், இலங்கை மக்களை வறுமையிலிருந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகம் முன்பு இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணிக்கு பூநகரி பிரதேச செயலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அக்கராஜன் குளம், ஜெயபுரம் பகுதிகளிலிருந்து மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பதாகைகளில் புலம்பெயர்ந்த உறவுகளே உங்கள் உறவுகளை வறுமையிலிருந்து மீட்டெடுங்கள், உங்கள் முதலீடு தேவையான காலம் இது, அரிசி பை வேண்டாம் பணத்தை முதலீடு செய்யுங்கள் போன்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply